Other languages

Constipation and Bowel Control

மலச்சிக்கலும் மலக்குடல் கட்டுப்பாடும்

PDF   |  ஒலிநாடா

This fact sheet explains what constipation is and suggests some ideas for improvement and tells you where to get more help.

இந்த தகவல் பிரசுரம் மலச்சிக்கல் என்றால் என்ன என்பதனை விளக்குவதுடன் அதனைச் சீர்செய்வதற்கான சில யோசனைகளைத் தெரிவித்து மேலும் உதவிகளை எங்கே பெறலாம் என்பதனையும் சொல்லுகிறது.

What is constipation?

Constipation is a common disorder where bowel actions ('poo' or faeces) are not easily and/or less frequently passed. Symptoms of constipation include:

  • Hard stools
  • Excessive straining
  • Being unable to pass faecal matter and/or feeling as though your bowels are not completely emptied

மலச்சிக்கல் என்றால் என்ன?

மலங்கழிப்பு (‘கக்கா’ அல்லது அழுக்கு) கடினமாகவும் அல்லது அடிக்கடி குறைந்தளவிலும் வெளியேறுவது மலச்சிக்கல் எனப்படும் ஒரு பொதுவான ஒழுங்கீனம் ஆகும். மலச்சிக்கலுக்குரிய அறிகுறிகளாவன:

  • மலம் இறுக்கமடைதல்
  • அளவுக்கதிகமான கடும்முயற்சி (முக்குதல்)
  • மலத்தை வெளியேற்றமுடியாமையும் / அல்லது மலக்குடலிலிருந்து மலம் முற்றாக வெளியேறவில்லை என்ற ஒர் உணர்வு.

What does being 'Regular' mean?

  • You can 'hold on' to your bowel action until you get to the toilet
  • Once you are sitting on the toilet you can start a bowel action
  • You feel that you have emptied your bowel fully
  • Going to the toilet anywhere between 3 times a day to 3 times a week.
  • Being 'regular' can vary from person to person.

‘ஒழுங்காக’ இருத்தல் என்பதன் அர்த்தம் என்ன?

  • கழிவறைக்குப் போகும்வரைக்கும் மலத்தை வெளியேறவிடாமல் ‘அடக்கி’வைத்திருக்க உங்களால் முடியும்.
  • கழிவறையில் உட்கார்ந்ததும் மலங்கழிக்க ஆரம்பிக்கலாம்.
  • மலக்குடலிலிருந்து முற்றாக வெளியேறிவிட்டதாக நீங்கள் உணர்கிறீர்கள்
  • ஒரு நாளில் 3 தடவைகள் தொடக்கம் ஒரு வாரத்தில் 3 தடவைகள் வரை எதுவரைலாயினும் கழிவறைக்குப் போதல்
  • ‘ஒழுங்காக’ இருப்பது ஆளுக்காள் வேறுபடலாம்.

What can cause constipation?

  • Insufficient fibre intake in the diet
  • Insufficient daily fluid intake
  • Insufficient exercise
  • Prescription and/or over-the-counter pain relief medications or chronic health conditions
  • Pregnancy and childbirth
  • Bowel disorders and/or damage that require further medical investigation
  • Prolapse - a sagging and/or collapsing of internal organs which interferes with bladder and bowel control

மலச்சிக்கலை ஏற்படுத்துவது எதுவாகலாம்?

  • உணவுடன் போதியளவு நார்ப்பொருளை உட்கொள்ளாமை
  • நாளாந்தம் போதியளவு திரவப்பொருளை அருந்தாமை
  • போதியளவு உடற்பயிற்சி இல்லாமை
  • மருந்துகளும்/ அல்லது உடனுக்குடன் வாங்கிப் பாவிக்கும் வலிமாத்திரைகள் அல்லது நீடித்த நோய்கொண்ட உடல் நிலை
  • கர்ப்பம் மற்றும் பிள்ளைப்பேறு
  • மலங்கழிப்பு ஒழுங்கீனமும்/ அல்லது மேலதிக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டிய பாதிப்புகள்
  • குடற்பிதுக்கம்-வெளித்தள்ளலுடன் கூடிய/அல்லது சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் கட்டுப்படுத்தலுடன் தொடர்புடைய உள்ளுறுப்புக்கள் தளர்ச்சியடைதல்.

What should your 'poo' look like?

Your poo should be light or dark brown, sausage-shaped, soft but firm, easy to pass and with minimal odour. Aim to have a type 3 or type 4 bowel action.

உங்கள் மலம் எப்படித் தோற்றமளிக்க வேண்டும்?

உங்கள் மலம் வெளிறிய அல்லது கடுமையான பழுப்பு (பிறவுண்) நிறமாக ‘சோசேஜஸ்’ வடிவத்தில், மெதுமையாக ஆனால் உறுதியாக, கழிப்பதற்கு இலகுவாக, குறைவான நாற்றம் கொண்டதாக இருக்க வேண்டும். 3ம் அல்லது 4ம் வகை மலங்கழிப்பை அடைய எத்தனிக்க வேண்டும்.

Common Bowel Problems

Faecal Impaction - When constipation causes faeces to pack the intestine (digestive tract) so tightly that your normal pushing action in the toilet is not strong enough to push the faeces out.

Faecal Incontinence (sometimes referred to as 'soiling') - This is the accidental loss of liquid or solid faeces. This can be due to the bowel (which stores the faeces) being too full, but this may be only one of the causes. Uncontrolled flatus ('wind') is often considered evidence of faecal incontinence.

Haemorrhoids (sometimes referred to as 'piles') - This can be the result of straining to have a bowel movement. This strain (similar to heavy lifting) can damage the rectum's veins. This can cause bleeding, soreness and itching.

Rectal Prolapse - This occurs when long-term straining causes a small amount of bowel lining to push out from the anus, which is a ring of muscle that opens and closes when we pass a bowel motion. 

பொதுவான குடல் பிரச்சினைகள்

மலக்கட்டு (மலஅடைப்பு) - மலச்சிக்கலால் கழிவு குடலுக்குள் இறுக்கமாக அடைபடும்போது (சமிபாட்டுப் பாதையில்) நீங்கள் சாதாரணமாகக் கழிவறைக்குள் வெளியேற்ற எத்தனிக்கும் இயக்கவிசை மலத்தை வெளியேற்றப் போதுமான வலுவுடையதாகாது.

மலம்வெளியேறுவதை அடக்க முடியாமை (சிலவேளைகளில் ‘அழுக்காதல்’ எனக்குறிப்பிடப்படும்) - இது எதிர்பாராமல் ஏற்படும் திரவ அல்லது திண்ம மல வெளியேற்றம் ஆகும். இது குடல் நிரம்பியிருப்பதன் (மலம் தேங்கியிருப்பதன்) காரணமாக இருக்கலாம், ஆனால் இது பல காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். கட்டுப்படுத்தமுடியாத வாயு வெளியேற்றம் (‘காற்று’) மலவெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமைக்கான அடிக்கடி பரிசீலிக்கப்பட்ட சான்றாகும்.

மூலநோய் (சிலவேளைகளில் ‘மூலக்கடுப்பு’ எனப்படும்) - இது மலங்கழிப்பதற்காக மூச்சைப்பிடித்துக் கடும் முயற்சி (முக்குதல்) செய்வதன் விழைவாகலாம். இந்தக் கடும் முயற்சி (பாரம் தூக்குவதற்கு ஒப்பானது) மலக்குடலின் இரத்தக்குளாய்களைப் பாதிக்கலாம். இது இரத்தோட்டம், எரிவு, சொறி போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

குதவாயில் குடலிறக்கம் - நீண்ட நாட்களாக மலங்கழிக்க கடும்முயற்சி செய்வதனால் ஒரு சிறிய அளவிலான குடலின் உட்பகுதி மலவாசலுக்கு வெளியே தள்ளப்படுகிறது. நாம் மலங்கழிக்கும்போது திறந்து, மூடும் மலவாசல் வட்ட வளையமான தசை நார்கள் கொண்டது.

How constipation affects bladder control

Constipation can cause accidential leakage from your bladder. An overfull bowel will cut down the volume of urine your bladder can hold and you will feel the need to go to the toilet often and in a hurry.

சிறுநீர்ப்பைக் கட்டுப்பாட்டை எவ்வாறு மலச்சிக்கல் பாதிக்கிறது

மலச்சிக்கல் எதிர்பாராத ஒரு ஒழுக்கை உங்கள் சிறுநீர்ப்பையிலிருந்து ஏற்படுத்தலாம். மிகவும் நிரப்பப்பட்ட மலக்குடல் உங்கள் சிறுநீர்ப்பை கொள்ளக்கூடிய சிறுநீரின் கொள்ளளவைக் குறைப்பதுடன் நீங்கள் கழிவறைக்கு அவசரமாக அடிக்கடி போகவேண்டிய தேவையை உணர்வீர்கள்.

Here are five ways to keep your bladder and bowel healthy and prevent constipation:

Eat well to keep your bowels regular and to have a healthy body weight

Eat a healthy diet high in fibre (at least 30g per day).

Drink well to prevent constipation and bladder irritation

Drink 1.5 -2 Litres(6-8 glasses) of fluid each day unless advised otherwise by your doctor. Fluid is water, fruit juice, tea, coffee, milk, soup, jellies and icecream.

Exercise daily to prevent constipation and keep a healthy body weight

Keep your pelvic floor strong for good bladder and bowel control

Request a pelvic floor muscle exercise leaflet by calling the National Continence Helpline 1800 33 00 66.

Toileting habits - Go to the toilet as soon as you need to and empty your bowel fully. Remember to relax.

உங்கள் சிறுநீர்ப்பையையும், மலக்குடலையும் சௌக்கியமாக வைத்துக்கொள்ளவும் அத்துடன் மலச்சிக்கலைத் தவிர்க்கவும் இங்கே ஐந்து வழிமுறைகள் உள்ளன:

நீங்கள் ஒழுங்காக மலங்கழிக்கவும், ஒர் ஆரோக்கியமான உடல் நிறையைப் பேணவும் நன்றாக உணவருந்தவும்

நார்ப்பொருள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் (ஆகக் குறைந்தது 30 கிராம் ஒரு நாளுக்கு).

மலச்சிக்கல், சிறு நீர்ப்பை அழற்சியைத் தவிர்ப்பதற்காக நன்றாக அருந்தவும்

உங்கள் வைத்தியரால் வேறுவிதமாக அறிவுறுத்தப்பட்டாலன்றி, ஒவ்வொருநாளும் 1.5 – 2 லீற்றர் (6-8 கோப்பைகள்) திரவம் அருந்துங்கள். நீர், பழரசம், தேநீர், கோப்பி, பால், ரசம், கூழ், கஞ்சி, ஐஸ்கிறீம் என்பன திரவம் ஆகும்.

மலச்சிக்கலைத்தவிர்க்கவும், ஆரோக்கியமான உடல் நிறையைப்பேணவும் தினம்தோறும் உடற்பயிற்சி செய்யவும்

சிறந்த சிறுநீர்பை, மலக்குடல் கட்டுப்பாடு என்பவற்றைப் பேண உங்கள் இடுப்பு அடித்தளத்தை உறுதியாக வைத்துக்கொள்ளவும்

‘நாஷனல் கான்டினன்ஸ் ஹெல்ப்லைன்’ 1800 33 00 66 ஐ அழைத்து இடுப்பு அடித்தள தசைநார் பயிற்சித் துண்டுப்பிரசுரங்களைக் கேட்டு வாங்குங்கள்.

கழிவறைப் பாவனைகள் - தேவை ஏற்பட்டதும் உடனடியாகக் கழிவறைக்குச் சென்று உங்கள் மலத்தை முற்றாக வெளியேற்றுங்கள்.
ஆறுதலடைய மறக்கவேண்டாம்.

Check your toileting postion:

  • Your knees should be raised slightly above the level of your hips
  • A small footstool might be needed to get you into the best position
  • See the diagram below for further help

கழிவறையில் இருக்கும் முறையைச் சரிபார்க்கவும்:

  • இடுப்பு மட்டத்திற்குச் சற்று உயரமாக உங்கள் முழந்தாள்கள் இருக்கவேண்டும்.
  • சிறந்த இருக்கையைப் பேண ஒரு சிறிய கால் பதிக்கும் பலகை தேவைப்படலாம்
  • மேலும் உதவிக்காக, கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும்

Laxatives

  • Laxatives are medicines that will help loosen the bowel motion to prevent blockages and straining.
  • Talk to your doctor about using these.
  • Generally, laxatives should only be taken for short periods of time.

மலமிளக்கி மருந்து (லக்ஸாரைவ்ஸ்)

  • மலமிளக்கி, மலம் அடைபடுதல், முக்குதல் என்பவற்றைத் தவிர்த்து இலேசாக மலங்கழிக்க உதவும் ஒரு மருந்தாகும்.
  • இதன் பாவனைபற்றி உங்கள் வைத்தியருடன் பேசவும்.
  • பொதுவாக, பேதிமருந்துகள் குறுகிய ஒரு காலத்துக்கு மட்டுமே எடுக்கவேண்டும்.

There are three types of laxatives:

  • Bulking Agents - These increase the bulk of the stool (faeces). Drinking at least 6-8 glasses of fluid daily is essential.
  • Lubricant Laxatives - These soften the faeces and make them easier to pass.
  • Stimulant/Irritant Laxatives - These make the bowel more active in moving faeces through the bowel.

மூன்று வகையான பேதிமருந்துகள் (மலமிளக்கி) உள்ளன:

  • திரளாக்கச் செயற்பாடு - இது மலத்திரளை அதிகரிக்கும். தினமும் ஆகக்குறைந்தது 6-8 கிளாஸ் திரவத்தை அருந்துவது கட்டாயமாகும்
  • உராய்வைத்தடுக்கும் பேதிமருந்துகள் - இது மலத்தை மிருதுவாக்கிச் சுலபமாக வெளியேற்ற உதவும்
  • ஊக்குவிக்கும்/ உறுத்தும் பேதிமருந்துகள் - இது மலக்குடலை சுறுசுறுப்பாக்கி மலக்குடலூடாக மலத்தை நகர்த்தும்

If constipation is severe or continuing, go to your Doctor.

மலச்சிக்கல் கடுமையானால் அல்லது தொடர்ந்திருந்தால் வைத்தியரிடம் போகவும்

Who can help?

The first step to improving your bowel control is to have a full continence assessment carried out by a health professional.

யார் உதவ முடியும்?

உங்கள் மலக்குடல் கட்டுப்பாட்டை மேம்படுத்த முதற் கட்டமாக நீங்கள் ஒரு சுகாதார வைத்தியரைக் கொண்டு முழுக் கழிவு வெளியேற்ற மதிப்பீடொன்றைச் செய்துகொள்ள வேண்டும்.

For more information

There are a range of health professionals who can help you deal with constipation.

  • Visit your GP or specialist
  • Telephone a Continence Nurse Advisor on the National Continence Helpline 1800 33 00 66
  • To use an interpreter, ring the Translating and Interpreting Service (TIS) on 13 14 50

மேலதிகத் தகவல்களுக்கு

பல்வேறு வகையான மருத்துவ அறிஞர்கள் உங்களது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளித்து உதவ இருக்கிறார்கள்.

  • உங்கள் குடும்ப வைத்தியரை அல்லது விசேடவைத்தியரைப் பார்க்கவும்.
  • ஒரு ‘கான்டினன்ஸ்’ மருத்துவத்தாதி ஆலோசகரைத் தொலைபேசியில் ‘நாஷனல் கான்டினன்ஸ் ஹெல்ப்லைன்’ 1800 33 00 66 இல் அழைக்கவும்
  • ஒரு மொழிபெயர்த்துரைப்பவரைப் பெற மொழிபெயர்ப்பு மொழிஉரைப்புச் சேவை (TIS) ஐ 13 14 50 இல் தொடர்பு கொள்ளவும்